யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி நடைமுறையை தளர்த்துவது தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி நடைமுறையை தளர்த்துவது தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபரிடம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான அனுமதிகள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதங்களை ஆட்சேபித்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
 
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவோர் படையினரின் அனுமதியை பெறவேண்டுமென்ற கட்டாயம் இருப்பதால், உடனடியாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறமுடியாத நிலை காணப்படுவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply