கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு : போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்
லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் அங்கமான ரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 மருந்துகளின் கலவையானது கொரோனா நகலெடுப்பை குறைக்கும் என்று கூறுகின்றனர்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் சிசிலியா அர்ரியானோ கூறுகையில், “இந்த மருந்துகளால் வைரஸ் நகலெடுப்பது 50 சதவீதம் மட்டுமே நடந்தள்ளது என்பதை கண்டுள்ளோம். வைரஸ் செயல்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும்”என குறிப்பிட்டார்.
இந்த மருந்துகளானது, கொரோனாவால் ஆஸ்பத்திரிகளில் சேருவதை குறைக்குமாம்.
2 மருந்துகள் மற்ற நோய்களுக்கு மருந்தாகவும், எஞ்சிய மருந்து சந்தை ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் அவர்கள் காப்புரிமை பிரச்சினையால் மருந்துகளின் பெயர்களை வெளியிடவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply