பூநகரி ஊடாக யாழ்.-கொழும்பு வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
புலிகளிடமிருந்து அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தையும் தென்னிலங்கையையும் இணைக்கும் வீதியைப் புன்ரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு வரும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது பற்றி மேலும் குறிப்பிடுகையில்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளின் அடுத்த கட்டமாக சிலாபத்துறையிலிருந்து பூநகரி வரையான 41 கிலோ மீற்றர் நீளமான பாதை புனரமைக்கப்படவுள்ளது. மன்னார் முதல் பூநகரி வரை 2 ஒழுங்கைகளைக் கொண்ட நெடுஞ்சாலையொன்றும் நிர்மாணிக்கப்படும். இதேவேளை, மடு முதல் சிலாபத்துறை வரையான வீதியில் தற்போது புணரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதிப் புனர்நிர்மாணப் பணிகளுக்கான கேள்விப் பத்திரங்களை ஒப்படைக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிலபாத்துறையில் நிர்மாணிக்கப்பட்ட 180 மீற்றர் நீளமான இரும்புப் பாதை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply