புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த மாணவர்களும் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் இந்தப் பரீட்சை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை, ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறும் என்றும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வன்னியில் இருந்து வந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1400 தோற்றவிருப்பதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். இவர்களில் 150 பேர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர்களில் 120 பேர் ஆண்கள் என்றும் அவர்கள் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் பெண்கள் என்றும் அவர்கள் பம்பைமடுவில் உள்ள யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த மாணவர்களுக்கு வவுனியா கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஸ்ட ஆசிரியர்கள் மீட்டல் பயிற்சி வகுப்புக்களை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தி வருவதாகவும் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்து வந்து செட்டிகுளம் மனிக்பாம் பகுதியில் உள்ள 9 நிவாரண கிராமங்களில் உள்ள 800 மாணவர்கள் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட பாடசாலையில் மீட்டல் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த சிரேஸ்ட ஆசிரியர்கள் கிழமை நாட்களிலும், கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியர்கள் விடுமுறை நாட்களிலும் இவர்களுக்கான மீட்டல் பயிற்சி வகுப்புக்களை நடத்தி வருகின்றார்கள்.
வவுனியா பாடசாலைகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான மீட்டல் பயிற்சி வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாகக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வவுனியா மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் சிரேஷ்ட ஆசிரியர்களின் மூலம் விசேட வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்,ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply