நாட்டின் ஆட்சியை பிடிக்க எதிர்கட்சி செய்யும் சதியை அம்பலப்படுத்தும் அமைச்சர்
நாட்டை தொடர்ச்சியாக மூடி வைக்குமாறு எதிர்கட்சி அழுத்தம் கொடுப்பதன் நோக்கம் அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையச் செய்து ஆட்சியை பிடிப்பதற்கே என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டை மூடியுள்ள நிலையில் பாதியே மூடியுள்ளதாக எதிர்கட்சி குற்றம் சுமத்துவதாக அவர் கூறினார்.
கைத்தொழில் பேட்டைகளை மூடியதும், ஏற்றுமதி தடை செய்யப்பட்டதும் நாட்டுக்கு வரும் வௌிநாட்டு செலாவணி இல்லாது போகும் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், டொலர் இவ்வாது போன பின் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது போகுமென குறிப்பிட்டார்.
அப்படி ஒரு நிலைமை உருவான பின் இந்த அரசாங்கத்திற்கு முடியாது வீட்டுக்கு அனுப்புவோம் என்று கோஷம் எழுப்பிக் கொண்டு வீதிக்கு இறங்க எதிர்கட்சியினருக்கு அப்போது சுலபமாக இருக்கும் எனவும் அதற்கான முயற்சியே மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply