இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா விசேட வரி

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபா விசேட வர்த்தக வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தேசிய உற்பத்தி பெரிய வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளதால் உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தில் பெரிய வெங்காயம் உள்நாட்டு உற்பத்தி மூலம் சந்தைக்கு வருவதால் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விலையை அதிகரிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply