ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு

ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள், அங்கு அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் காபூலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆப்கானிஸ்தானில் அமையும் தலிபான்களின் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும், தலிபான் தலைவர் முல்லா பரதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார்.

வெளியுறவுத் துறை துணை மந்திரியாக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாயும், உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் இருப்பார்கள். பாதுகாப்பு மந்திரியாக முல்லா யாக்கூப் பதவி ஏற்பார். அரசை நடத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த மந்திரிசபை அமைக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போராட்டங்கள் சட்டவிரோதமானவை. தற்போது ஒரு அரசு அமைக்கப்படும் நிலையில், அதனிடம்தான் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply