இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரிகள் செய்த பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை அந்த நாட்டின் அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் கூறுகையில், “12 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்துவதற்கான தலைமை மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். கொரோனா பரவுவதில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள். பள்ளிகளில் கொரோனா பரவல் குறையும், இதனால் வகுப்பறையில் மாணவர்கள் இருப்பார்கள்” என குறிப்பிட்டார்.
இதன்படி குழந்தைகளுக்கு பைசர்/பயோ என்டெக் தடுப்பூசி போடப்படும்.
ஆனால் இப்படி தடுப்பூசி போடுவதற்கு குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் சம்மதத்தை தடுப்பூசி செலுத்தும் ஊழியர்கள் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply