சிறைக்குள் அடாவடியில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவி நீக்குமாறு சஜித்

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு உள்நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவி நீக்குமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தையும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“அனுராதபுரம் சிறைச்சா​லைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது. இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன்.”

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply