சிறைக் கைதிகள் மீது கை வைக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல : லொஹான் ரத்வத்த

சிறைக் கைதிகள் மீது கை வைக்கும் அளவிற்கு தான் முட்டாள் அல்ல என ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு தான் சென்றது உண்மை எனவும் ஆனால் ஊடகங்கள் கூறுவது போல அங்கு சட்ட விரோதமாக செயல்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற அடிப்படையில் எந்த ஒரு சிறைச்சாலைக்குள் எந்த ஒரு நேரத்திலும் பரிசோதனைக்கு செல்ல தனக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நண்பர்களுடன் குடிபோதையில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply