கொரோனா பரவல் குறைவு : ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி

கொரோனா வைரசின் மூன்றாவது அலையில் உள்ள ஆஸ்திரேலியாவில் நேற்று காலை நிலவரப்படி ஒரு நாளில் 1,800 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 16 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மனித உயிர் பாதுகாப்பு நிர்ணய சட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதை கட்டுப்படுத்தியது.

இந்நிலையில், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நவம்பர் 1 முதல் தாராளமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம்.

இதுதொடர்பாக அந்நாட்டின் சுகாதார மந்திரி கிரேக் ஹண்ட் கூறுகையில், ஆஸ்திரேலிய குடிமக்களும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும், வெளிநாடு செல்ல விரும்பினால் 2 தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை சிகிச்சை பொருட்கள் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். பயணத்துக்கு குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னதாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply