உருமாறிய புதிய கொரோனா பரவிய நாடுகள் : அதிர்ச்சி தகவல்

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியதாகும். இந்த வைரஸ் இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆந்திராவில் 7 பேருக்கும், கேரளாவில் 4 பேருக்கும், தெலுங்கானாவிலும், கர்நாடகத்திலும் தலா 2 பேருக்கும், மகாராஷ்டிரத்திலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா ஒருவருக்கும் என மொத்தம் 17 பேருக்கு பாதித்துள்ளது. இந்த வைரஸ் அதிகளவில் இங்கிலாந்தில்தான் பரவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply