2022 இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்கப்படும் : பிரதமர் மோடி

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறுகிறது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இடையே உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

கொரோனாவை வைரஸ் பரவலின்போது 150 நாடுகளுக்கு மருந்துகள் உள்ளிட்டவை வினியோகிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கோவாக்சின் தடுப்பூசியும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அனுமதி கோரி உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளோம். அதற்கு அனுமதி கிடைத்ததும் மற்ற நாடுகளுக்கும் விநியோகிக்க தயாராக உள்ளோம்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி டோஸ் தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, அதை உலக நாடுகளுக்கு விநியோகிக்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply