இலங்கையர்களுக்கு இந்தியாவில் உயரிய விருது
பத்ம விருதுகளை வழங்கும் வைபவம் 2021 நவம்பர் 8ஆம் திகதி புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றிருந்த நிலையில், இந்நிகழ்வில் இந்திய ஜனாதிபதி அவர்கள் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருது வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
கொவிட்-19 காரணமாக இந்நிகழ்வுகளை முன்கூட்டியே நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டில் இலங்கையை சேர்ந்த இருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில்கொள்ளப்படவேண்டியதாகும். கலைத்துறை சார்ந்த சாதனைகளுக்காக டாக்டர் வஜிர சித்ரசேனா அவர்களுக்கும்
இலக்கியம் மற்றும் கல்வித் துறைக்கு வழங்கிய பங்களிப்புக்காக பேராசிரியர் (மறைந்த) இந்திரா தசநாயகே அவர்களுக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் வழங்கப்படும் உயரிய குடியியல் கௌரவங்களில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் திகதி அறிவிக்கப்படும். பல்வேறு துறைகளிலும் தளங்களிலும் நிகழ்த்திய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய துணை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் ஆகியோரது பிரசன்னத்துக்கு மத்தியில் இந்திய ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருதினை பெற்றுக்கொள்வதற்காக மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயகே அவர்களின் புதல்வி வத்சலா தசநாயகே இஸ்தவீர அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்திருந்த அதேவேளை டாக்டர் வஜிர சித்ரசேனா அவர்களுக்கான விருது எதிர்வரும் நாட்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது திறமைகள் மற்றும் சாதனைகள் ஊடாக சமூகத்திற்கு உயரிய சேவைகளை வழங்கிய பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த தனிநபர்களை கௌரவிப்பதற்கான உறுதிப்பாட்டை இந்திய அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் பிரபலமான கண்டிய நடனக் கலைஞரும் குருவுமான வஜிர சித்ரசேனா அவர்களும் அதேபோல களனி பல்கலைக்கழகத்தின் இந்தி மொழித்துறை பேராசிரியரும்
மொழியியல் நிபுணருமான இந்திரா தசநாயகே, அவர்களும் தமது
துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்கியுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை இந்திய மக்கள் இடையிலான நட்புறவின் பிணைப்புக்களையும் கலாசார உறவுகளையும் மேலும் வலுவாக்கும் வகையில் அவர்கள் இருவரும் மிக முக்கியமான வகிபாகத்தை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2020க்கு முன்னதாக இந்திய அரசாங்கம், மக்சாய்சாய் வெற்றியாளரும் இசைக் கலைஞருமான டபிள்யூ.டி.அமரதேவா அவர்களுக்கு 2002ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply