பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தென்அமெரிக்க நாடான பிரேசிலில் முன்கள பணியாளர்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தி கொள்ளலாம் என அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி மார்செலோ குயிரோகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நமக்கு கிடைத்த தகவலுக்கு நன்றி, 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோசை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் ‘டோஸ்’ வழங்க முடிவு செய்துள்ளோம்” என கூறினார்.
சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான பிரேசிலியர்கள் பூஸ்டர் ‘டோஸ்’ பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகிறது. உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply