தொழிலாளர்களின் உரிமைகளை நிராகரிக்கக் கூடாது : ஜீவன் தொண்டமான்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிராகரிக்கக் கூடாதென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். நேற்று (22) ராஜகிரியவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், 1,000 ரூபா சம்பளக் கொடுப்பனவுக்குப் பின்னர், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இராஜாங்க அமைச்சர் விபரித்துக் கூறினார்.
தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு குறைவாக எடை போடப்படுகிறது. முழு நாளும் வேலை செய்தாலும் அரைநாள் பெயர் போடப்படுகிறது. பெருந்தோட்டங்களில் காவல் தொழிலில் ஈடுபடுவோர் விடுமுறை நாட்களில் வேலை செய்தபோதிலும், அதற்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இவையெல்லாம் தொழிலாளர் உரிமைகளை மீறுவதாகும். உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க பின்னிற்கப் போவதில்லையென இராஜாங்க அமைச்சர்ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய கலந்துரையாடலில் முதலாளிமார் சம்மேளனம், காங்கிரஸ் அடங்கலாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றார்கள். இதன்போது, தொழிற்சங்கங்களின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், காலக்கிரம அடிப்படையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் முதலாளிமார் சம்மேளனத்துடன் இணக்கம்காணப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply