பல்கேரியாவில் பேருந்து விபத்து: 40க்கும் மேற்பட்டோர் பலி பலியானவர்களில் 12 குழந்தைகள்

BUS

பல்கேரியாவில் ஒரு மோசமான பேருந்து விபத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் சோபியாவிற்கு தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ட்ரூமா நெடுஞ்சாலையில் இரவு இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.


அங்கிருந்து கிடைக்கும் செய்திகளின் படி பயணிகளில் பன்னிரண்டு குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பஸ் இஸ்தான்புல்லில் இருந்து வடக்கு மாசிடோனிய தலைநகர் ஸ்கோப்ஜே நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தாக செய்திகள் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணங்கள் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை. காயமடைந்த பலர் சோபியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply