ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உருவாகி 2 ஆண்டுகள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் 351 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 119 ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவில் ரஷியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சைத் தொடர்ந்து கொரோனாவால் 1 லட்சம் பலியைக் கடந்த 5-வது நாடு என்ற பெயரை ஜெர்மனி பெற்றுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 75 ஆயிரத்து 961 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொரோனா தொடர்பான தரவுகளை வெளியிடும் ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு பல ஆஸ்பத்திரிகளிலும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply