நோய் பரப்பும் பலர் சமூகத்தில் மக்களே அவதானம்:ஹேமந்த ஹேரத்
இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களின் போது சுகாதார பாதுகாப்புடன் செயற்படுவது இன்றியமையாத ஒன்று என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் மரணிப்பவர்களது எண்ணிக்கை அதிகரிப்பானது, நோயாளர்கள் குறையவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்தையும் கடந்து செல்கிறது.
இந்த நிலையில், பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் , நோய் அறிகுறிகள் இன்றி சமூகத்தில் நோய் தொற்றை பரப்ப கூடியவர்கள் இருக்க கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார பிரிவால் நாளாந்தம் 5 ஆயிரத்திற்கும் அதிகமான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், நோய்த் தொற்றுக்கு உள்ளான பின்னரே தொற்றாளர்கள் தொடர்பில் தமக்கு அறிய கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி பாதுகாப்புடன் நோய் அறிகுறிகள் இன்றி நோயைப் பரப்பக்கூடிய பலர் சமூகத்தில் இருக்கக்கூடும் என்பதால், அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply