ஞானசார தேரருக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி குறிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2022 மார்ச் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மனுதாரர் ஆசாத் சாலி மற்றும் ஏனைய சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் கணினி ஆதாரங்களை ஆராய ஞானசார தேரரின் சட்டத்தரணி அனுமதி கோரியதையடுத்து நீதிபதி அனுமதி வழங்கியதுடன் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

ஞானசார தேரர் தற்போது “ஒரே நாடு – ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply