Omicron வைரஸ் ஜேர்மனிக்கு வந்துவிட்டது மாகாண அமைச்சர் பரபரப்பு தகவல்

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய நபரை ஜேர்மனி கண்டறிந்துள்ளது.

ஜேர்மனியின் ஹெஸ்ஸே மாகாணத்தில் உள்ள ஒரு அமைச்சர் சனிக்கிழமையன்று, சமீபத்தில் தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் (Omicron) ஜெர்மனிக்கு வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

“நேற்று இரவு தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு பயணிக்கு பல ஓமிக்ரான்-மாதிரியான பிறழ்வுகள் இருப்பது கண்டறியப்பட்டன,” என்று பிராங்பேர்ட் விமான நிலையத்தின் தாயகமான Hesse மாநிலத்தின் சமூக விவகார அமைச்சர் கை க்ளோஸ் (Kai Klose) ட்வீட் செய்துள்ளார்.

ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அந்த நபரை முழுமையாக பரிசோதித்து வருவதாக அவர் கூறினார்.

தெற்கு ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் (Botswana) முதல் முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசுக்கு ‘Omicron’ (B.1.1.529) என உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் வேகமாக பரவும், தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுள்ளனர். மேலும், இதை ‘கவலைக்குரிய வைரஸ் வகை’ என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர். இந்த மாறுபாடு கணிசமாக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply