இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (27) இரவு கூடிய போது கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்திருந்தனர்.
நேற்று (27) முதல் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பேக்கரி பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply