கிழக்கு மாகாணசபையில் 2009ம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
கடந்த செவ்வாயன்று முதலமைச்சரும் நிதியமைச்சருமான சந்திரகாந்தன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையினுடைய 2009ம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் நான்கு நாள் விவாதங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (நவ. 21) மாலை 5.30 மணியளவில் மேற்படி வரவு – செலவுத் திட்டத்திற்கான விவாதங்கள் நிறைவு செய்யப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சார்பில் 16 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக ஜே.வி.பி உறுப்பினர் ஒரு வாக்கு அளிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி (முஸ்லிம் காங்கிரஸ் உட்பட) இவ்வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரும் நடுநிலைவகித்தார். இந்த நிலையில் 15 மேலதிக வாக்குகளால் 2009ம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் கிழக்கு மாகாணசபையில் நிறைவேறியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply