மடு தேவாலயத் துப்புரவுப் பணிகளில் மன்னார் பங்குமக்கள்
மடு தேவாலயத்தைத் துப்புரவு செய்யும் பொருட்டு மன்னார் மறை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் மடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் தோட்டவெளி பங்கிலிருந்து 50 பேரும், உயிலங்குளம் பங்கிலிருந்து 80 பேரும், குஞ்சிக்குளம் பங்கிலிருந்து 50 பேருமாக 180 பேர் மடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மடு தேவாலயத்தின் உள்ளக மற்றும் வெளிப்புற சிரமதான பனிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை நாளை சனிக்கிழமை வவுனியா வேப்பங்குளம் பங்கிலிருந்து 140 பேரும், முருங்கன் அளவக்கை பங்கிலிருந்து 80 பேருமாக 220 பேரும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கைச் சேர்ந்தவர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமாதான அமைப்புக்களும் சிரமதான பணிகளை மேற்கொள்ள அழைத்துச் செல்ல இருப்பதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply