யாழ் வவுனியா தேர்தல்கள்
மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தேர்தல். மிகச் சிறிய தேர்தலாக இருந்த போதும் உலக சரித்திரத்தில் கண்டு கேட்டிராத ஆரவாரம். அதற்குக் காரணமும் இருக்கென்றே சொல்லலாம். பழைய காலங்கடந்த இனக்குரோத அரசியலைத் தமிழ்மக்கள் துறக்கிறோம் என்றதைச் சத்தியப் பிரமாணம் செய்து சிங்களமக்களோடு ஐக்கியப் படத் தயார் என்பதைச் சமிக்ஞை செய்யக் கிடைத்த முதலும் கடைசியுமான அரிய சந்தர்ப்பம். மனிதர்கள் தமது பிழைகளைச் சரி செய்யவேண்டும் என்னும் எண்ணமிருந்தால் எந்த நிலையிலும் சரி செய்து கொள்ள முடியும். மனிதர்கள் தம்மை எதற்குத் தகுதியுடையவர்களாக்க வேண்டுமென்று யோசிக்கிறார்களோ அதை அவர்கள் அடைவார்கள்.
இலங்கை இனக்குரோதச் சூறாவளிக்குள் அகப்பட்ட ஒரு சொர்க்கத்தீவாகும். அது குபேரனால் இராவணனுக்குப் பரிசளிக்கப் படட்தென்று இராமாயணம் பகரும். அது ஆதாமும் ஏவாளும் பிறந்த ஏடின்தோட்டமென்று கூறும் ஐதீகங்களும் உண்டு.
‘பண்டி லங்கைமலை மீதுதவ நின்ற நபி” என்று வரகவி காசிம்புலவர் பாடியுள்ளார். அதாவது ஆதி நாளில் இலங்கையில் உள்ள மலைமேல் ஆதாம் நபி தவம் செய்தார் என்று அவர் பாடியுள்ளார். இவை கனவோ கற்பனையோ எதுவாக இருந்தாலும் அறிஞர்களை அது அப்படிக் கவர்ந்துள்ளது என்பதுவே உண்மை.
இது கடந்த முப்பது வருடமாக யுத்த நரகத்தில் தத்தளித்தது. எண்பதற்கு முன்னர் பூகோளத்திலேயே பல் கலாச்சாரத்தால் அழகுபடுத்தப்பட்டு மகிழ்வோடு வருவோரை வரவேற்ற மக்களைக் கொண்ட நாடாக இருந்தது. எங்கு பார்த்தாலும் தொடக்கமும் முடிவுமற்ற பசுமை படர்ந்த காட்சிகள். ஆறுகளும் வாவிகளும் சோலைகளும் பறவைகளும் விலங்குகளும் கற்பனைக்கு எட்டாத மட்டத்திற்குத் செழித்திருந்தது, எம்மைப்பெற்ற அன்னையரும் தந்தையரும் வாழ்ந்த பூமி. அதனால் அது கணிசமான வாழ்க்கைத்தரத்தை எமக்கு ஈய்ந்தது. போர்க்காலத்திற் கூடப் பட்டினியால் யாரும் செத்தார்கள் என்ற செய்தியைப் பதிவு செய்யாத நாடு. அந்தப் பச்சப் பசேலென்ற குட்டித்தீவை இந்து சமுத்திரம் அகளிவெட்டிக் காப்பாற்றி இருந்தது. திமிங்கிலங்களும் சுறாக்களும் ஓங்கில்களும் அதைச் சுற்றிக் காவல் காத்தன. இந்திய உபகண்டம் அதைப்பார்த்துச் சொக்கியது. வந்த அராபிய வணிகர்களும் ஐரோப்பிய மாலுமிகளும் திரும்பிப் போக மனமில்லாமல் கிறங்கி நின்றனர்.
இங்கே இரண்டு நாட்டுபுறச் சிங்கள இளைஞர்களின் கலவருங்களும் முப்பது வருடத்தேசிய இனக்கலவரங்களும் அத்தீவின் உடலத்தைக் கீறி இருத்தம்பெருக விட்ட துர்ப்பாக்கிய நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. 100000 பேர் கொல்லப் பட்டு விட்டனர். மொத்தப் பொருள் அழிவு 200 பில்லியன் டொலருக்கும் கூட. அரசகடனைத் தலா தலைக்குப் பிரித்தால் இலங்கைப் பிரயைகள் ஒவ்வொருவரும் ரூபா 17500 கடனாளிகளாகும். 30 வீதம் பணவீக்கம்.
மாறிமாறி வந்து போன அரசாங்கங்கள் சட்டத்தைச் சட்டை செய்யாது எழும் பிரச்சனைகளை சட்டங்களை மீறி இராணுவ வழியிற் தீர்க்கவே முயன்றனர். அரசியற் கொலை, காட்டுமிராண்டித்தனம் இனந்தெரியாத கொலை வெள்ளைவான் கடத்தல் என்பன கலாச்சாரம் ஆகின.
ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் சுதந்திரம்பெற்றது எம் நாடு. அதன் பின்பு அங்கே பாராளுமன்ற ஜனனாயகம் பூத்துக் குலங்கியிருந்தது. ஆசியாவின் இரண்டாவது செல்வந்த நாடாக இருந்தது. உலகத்திற்கே உதாரண சமூக சேவை நாடாக இருந்தது. அதன் சராசரித் தனியார் வருமானம் தென்கிழக்காசியவின் சாராசரித் தனியார் வருமானத்திலும் உயர்ந்ததாக இருந்தது. அங்கே பெருந்தோட்ட்ப் பொருளாதாரம,; நல்ல உட்கட்டுமானம், திறமையான நிர்வாக சேவை, நீதி, சட்டத்தின் ஆட்சி, சர்வவியாபகக் கல்வி, சர்வவியாபக வைத்திய சேவை எல்லாமே திருப்திகரமாக இருந்தது. 1960 இல் இலங்கையின் வாழ்க்கைத்தரம் தென்கொறியாவிலும் தாய்வனிலும் கூடியதாக இருந்தது. 1970 இல் மலேசியவும் இலங்கையும் ஒரே வாழ்க்கைத்தரத்தில் இருந்தன. முற்றாகவே வறுமை ஒழிக்கப்பட்டிருந்தது. இளம்பிள்ளை வாதம் அம்மை மலேரியா கட்டுப்படுத்தப் பட்டிருந்தன. வாழ்க்கைத்தரம் இன்றிருப்பதிலும் பார்க்க நாலு மடங்கு கூடுதலாக இருந்தது.
இலங்கை தென்கிழக்காசியாவிலேயே முதலாவது ஜனனாயக நாடு. 1931 இலேயே ஜனப்பிரதிநிதி சபையும் ஆண் பெண்பால் இருவருக்குமான சார்வஜன வாக்குரிமை, தொழிற்சங்க உரிமைகள், சகிப்புத்தன்மையோடு கூடிய அரசியல் விவாதங்கள், நடுவு நிலமையான ஊடகக் கலாச்சாரம், கலாச்சார வளர்ச்சியின் அளவுமானியான இனக்கலப்புத் திருமணங்கள,; சிவில்சமூகம் என்பன ஒப்பாரும் மிக்காருமில்லாமல் இருந்தன.
‘பின்தங்கிய மக்களுக்குக் கிழுகிழுப்பை ஏற்படுத்தும் கற்றுக்குட்டி அரசியல்வாதிகள் இந்த நாட்டின் சுதந்திரத்தைப் பாழடிப்பார்கள”; என்று குடியியற் சட்ட மேதையும் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது உபவேந்தருமான சேர் ஐவர் ஜென்னிங்ஸ் அன்று கூறியிருந்தார் . அது இன்று நடந்து முடிந்துவிட்டிருக்கிறது.
சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களில் மாத்திரம் தங்கிநின்று சிங்கள மக்களுக்குக் கோரிக்கை விடுவதை வழக்கமாகக் கொண்டார்கள். தமிழ் அரசியல் வாதிகள் தம் பங்குக்குத் தமிழ் மக்களுக்கு மாத்திரம் கோரிக்கை விட்டார்கள். பரஸ்பர தமிழ் விரோதமும் சிங்கள விரோதமும் அரசியற் சாணக்கியத்தின் அதீத சாதனை என்றார்கள். சிங்கள தமிழ் மொழிகளைப் பரஸ்பரம் கற்றுக் கலாச்சார பலன் பெறுவதைத் தடுத்தார்கள். நாடடி;ல் உள்நாட்டு; யுத்தம் நாளாந்த அரசியல் நிகழ்ச்சி நிரலாகியது.
இன்று கனவு போல் யுத்தம் முடிந்து விட்டது. சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் எல்லோருமே புதுப்பிறவி எடுத்துள்ளார்கள். பூகோளமயமான உலக அரசியலும் கட்டுக்கடங்காத நிதி பொருளாதார நெருக்கடிகளால் மூன்றாமுலக யுத்தத்தின் விழிம்பில் நிற்கிறது. நாடோ வெளிநாட்டுச் செலவாணி நிலுவையும் இழந்து வங்குறோட்டின் வழிம்பில் நிற்கிறது. நாம் தொடர்ந்து கடந்தகால அரசியற் தவறுகளை அசைவெட்டுவதால் எதையும் சாதித்துவிட முடியாது.
எமக்குப் புதிய அரசியலும் புதிய வேலைத்திட்டங்களும் புதிய சுலோகங்களும் தேவை. நாம் முழு இலங்கையின் உரிமைக்காரராக வேண்டும். இலங்கையின் முழு வளங்களையும் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களிடையே பகிர்ந்து அனுபவிக்கும் அரசியற் கலாச்சாரச் சூழலைப் படைக்க வேண்டும். இலங்கை அரசைப் பொரளாதார ரீதியில் உயர்த்துவதில் நாம் முன்னணிப்பங்காளராகி அதன் பலாபலனிலும் உரிமையுள்ள பங்காளராக வேண்டும். அதன் முன் நிபந்தனையாக நாம் தேசிய அரசியல் நீரோட்டத்தில், உயர்த்தப்பட்ட அரசியல் உணர்மையோடும், சுறுசுறப்பாகவும் பங்கு கொள்ள வேண்டும். அதற்கான சமிக்ஞையாகவே இன்றய யாழ், வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்களில் பங்கு கொள்ள வேண்டும். நாம் அதிலே வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் நாம் சிங்கள மக்களோடான குரோதத்தை விட்டுவிட்டோம் என்பதைக் காட்டும் அரிய வாய்ப்பாக இந்தத் தேர்தலைப் பயன் படுத்த வேண்டும். இது எதிர்கால தமிழர்களின் அரசியலுக்கான புதிய தொடக்கமாகும். எதிர்காலப் பரம்பரைக்குத் தயாரிப்பதே உயர்ந்த கலாச்சாரமாகும்
‘நேற்று உதிர்ந்த மலர்
அரிய மலர் ஆனாலும்
அத்தனையும் மறந்துவிட்டு
நாளை நமக்காக
நல்ல மலர் மலரும்
அதை நோக்கிச் சிறகடிப்போம்.”
-;ஹோசிமின்-
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply