புலிகளின் தலைவரென உரிமை கோரும் கே.பி.தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டார்
புலிகளின் தலைவரென உரிமை கோரும் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்தது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹனவும் இதனை ஊர்ஜிதம் செய்தார். புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் கொள்வனவு செய்வதிலும் நிதி திரட்டுவதிலும் இவர் ஈடுபட்டு வந்தவர்.இலங்கையில் பல்வேறு அரசியல் தலைவர்களின் கொலைகளுடன் தொடர்புள்ள கே. பி. சர்வதேச மட்டத்தில் தேடப்பட்டு வந்தவர். ‘இன்டர்போல்’ என்று அழைக்கப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடமாடியவரெனத் தெரியவந்துள்ளது.
தாய்லாந்தில் இவரைக் கைது செய்த பொலிஸார் இவருடைய பெயரில் இருந்த பல்வேறு நாடுகளுக்குரிய 200 கடவுச் சீட்டுக்களைக் கைப்பற்றியுள்ளனர்.புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கே. பி. கைது செய்யப்பட்டார் என பாங்கொக் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டது. புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் அதன் தலைவராகத் தன்னைத்தானே உரிமை கோரி வருபவர் கே. பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனாவார்.
இலங்கையில் புலிகளின் பயங்கரவாதம் பூண்டோட அழிக்கப்பட்டதன் பின்பு இலங்கைக்கு வெளியில் செயற்படப் போவதாக கே. பி. அறிவித்திருந்தார்.கொலைகள், ஆயுதக் கடத்தல், சட்டவிரோத நிதி சேகரிப்பு, ரஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு செயற்பாடுகளுடன் தொடர்புடைய கே. பி., இலங்கை அரசாங்கத்தினால் தேடப்பட்டுவரும் முக்கிய கிரிமினலாவார். கே. பி. மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.
1955 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த கே. பி. செல்வராசா பத்மநாதன், குமரன் பத்மநாதன் போன்ற பல்வேறு பெயர்களில் உலக நாடுகளில் நடமாடித் திரிந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் தன்னைத் தானே தலைவராகப் கே. பி. பிரகடனப்படுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply