இனத்தை இனம் அழிக்கும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க உதவிபுரிய கூடாது :அமைச்சர் ரிசாத்

நாட்டில் இனியொருபோதும் இனத்தை இனம் அழிக்கும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு மீள்குடியேறும் மக்கள் உதவிபுரிந்துவிடக் கூடாது என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அடக்கி ஆளும் நிலைக்கு இனியும் நாம் இடமளிக்கக் கூடாது என்று வவுனியாவில் நேற்று முன்தினம்  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துமுகமாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரிசாட்,“இடம்பெயர்ந்த மக்களை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட பிரசாரம் செய்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர் ஒருவர் முன்பே இருந்திருந்தால் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டு உயிர்கள் அழிந்திருக்கா! புலிகளின் தளபதிகள் இன்று ஜனநாயக வழிக்கு வந்து மக்களுக்கு சேவைசெய்வதற்கு ஜனாதிபதியின் செயற்பாடுகள்தான் காரணம். இந்த நாட்டில் இனவாதத்தைப் பூண்டோடு இல்லாது அழிக்கவேண்டும். அது தமிழ், முஸ்லிம், சிங்கள இனவாதமாக இருந்தாலும் சரி இனியொருபோதும் இடமளிக்கக்கூடாது ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஒரு சிறந்த நிர்வாகி. நாட்டின் விபரங்களை விரல் நுனியில் வைத்துச் செயற்படுகிறார். கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் எத்தனை குளங்கள் உள்ளனவென்பதை அவர் ஆராய்ந்து வைத்து அவர் செயற்படுகிறார். ஓர் அரசாங்க அதிபரைவிட பசில் ராஜபக்ஷவுக்குத் தகவல்கள் தெரியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply