ஊவா, யாழ், வவுனியாவில் வன்முறையற்ற சுமுக தேர்தல்

ஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் நேற்று சுமுகமாக நிறைவடைந்தன. காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை மோதல்கள், வன்முறைச் சம்பவங்களற்ற சூழலில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் தலைமையகம் தெரிவித்தது.

இதன்படி, ஊவா மாகாணத்தில் 65 வீத வாக்குப் பதிவும், யாழ்ப்பாணத்தில் 25 வீத வாக்களிப்பும், வவுனியாவில் 50 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக் களம் நேற்று அறிவித்தது.தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புரைகளுக்கமைய இம் முறை தேர்தல் விதிமுறைகள் இறுக்கமாகக் கடைப்பிடிக் கப்பட்டதாகவும் அதனால் எதுவிதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லையெனத் தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர்.

வாக்களிப்பு நிலையங்கள் அவற்றை அண்டிய பகுதிக ளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. படையின ரும், பொலிஸாரும் ரோந்துச் சேவையிலும் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

காலையில் வாக்குப் பதிவு மந்தமாகக் காணப்பட்ட போதி லும், நண்பகலுக்குப் பின்னர் சுறுசுறுப்பாக இடம்பெற்ற தாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித் தனர். ஊவா மாகாணத்தில் மக்கள் அக்கறையுடன் வாக் களித்ததைக் காணக் கூடியதாக இருந்ததென்று அதிகாரி கள் தெரிவித்தனர். எனினும், ஆளடையாளத்தை நிரூபி க்கத் தவறிய எவரையும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை யெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊவாவில் பிற்பகல் இரண்டு மணிவரை 50% வாக்குப் பதிவு இடம்பெற்றிருந்தது. வாக்களிப்பு நிறைவடைந்த போது 63%௬5% வரை இடம்பெற்றதாகத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு எட்டு இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் தகுதி பெற்றி ருந்தனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 814 வாக்க ளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 23 கட்சிகளி லும், ஏழு சுயேச்சைக் குழுக்களிலுமாக 600 வேட்பாள ர்கள் களமிறங்கியிருந்தனர். இதில் 30 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

பதுளை மாவட்டத்தில் 5,75,814 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இந்த மாவட்டத்தில் 14 கட்சிகளும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலுமாக 432 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுள் 21 பேர் உறுப்பினர்க ளாகத் தெரிவு செய்யப்படுவர்.

மொனறாகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். நான்கு கட்சிகளிலும், இரண்டு சுயே ச்சைக் குழுக்களிலுமாக 168 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபைத் தேர்தல்களும் அமைதியான முறையில் நிறைவடைந்ததா கத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர். சிறு சிறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற் றதும் அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டதால், எதுவிதப் பிரச்சினைகளும் ஏற்படாமல் சுமுகமாக வாக் குப் பதிவு இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம், இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நண்பகல் வரை மந்தமாகக் காணப்பட்ட தாகத் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். யாழ் மாநகர சபை பிரதேசத்தி லிருந்து இடம்பெயர்ந்தவர்களுள் வாக்களி க்கத் தகுதி பெற்றிருந்த 6030 பேருக்கென கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுரா தபுரம், புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் 15 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தேர்தல்களில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு பதுளை மாவட்டத்தில் 16043 பேரும், மொனறாகலை மாவட்டத் தில் 8899 பேரும், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 335 பேரும், வவுனியா நகர சபை க்கு 183 பேரும் தகுதி பெற்றிருந்தனர்.

முதலாவதாகத் தபால் மூல வாக்களிப்பு முடிவுகளே வெளியாகின. தவிரவும் பொது வான முடிவுகள் நள்ளிரவுக்குப் பின்னர் வெளிவந்தன. இடம்பெயர் வாக்காளர்களின் வாக்குகள் அவ்வவ்வாக்குச் சாவடி கள் அமையப் பெற்றிருந்த தேர்தல் தெரி வத்தாட்சி அலுவலர் பிரிவில் எண்ணப் பட்டு யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply