விடுதலைப் புலிகளின் மாவீரத் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
விடுதலைப் புலிகளின் மாவீரத் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக கொழும்பின் பல்வேறு பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளவத்தையின் பெரும்பாலான வீதிகளின் நுழைவாயில்களில் கடமையில் ஈடுபட்டிருக்கும் விசேட அதிரடிப்படையினர் அதனூடாகச் சென்று வருபவர்களின் ஆளடையாள அட்டைகளைப் பரிசீலித்து வருகின்றனர்.
அப்பகுதியால் செல்பவர்களிடம் ஆளடையாள அட்டைகள், பொலிஸ் பதிவுகள் போன்ற ஆவணங்களைப் பரிசீலிக்கும் விசேட அதிரடிப்படையினர் ‘எங்கே செல்கிறீர்கள் எவ்வளவு காலம் கொழும்பில் தங்கியுள்ளீர்கள்’ போன்ற கேள்விகளைப் கேட்டுவருகின்றனர்.
இதேவேளை, இம்மாதம் 27ஆம் திகதி விடுதலைப் புலிகள் மாவீரர் தினத்தை அனுஷடிப்பதால் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இவ்வாரம் கூடிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மாவீரத் தினம் அனுஷ்டிக்கப்படும் காலங்களில் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply