இரண்டு தங்க பதக்கங்களைப் பெற்ற மட்டக்களப்பு மாணவிக்கு பாராட்டு

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழாவில் இரண்டு தங்க பதக்கங்களைப் பெற்ற மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய மாணவி அமிர்தலிங்கம் யசோதாவை மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் நேரில் சென்று பாராட்டியுள்ளார். பாவற்கொடிச் சேனையிலுள்ள மாணவியின் இல்லத்திற்கு நேற்று முன்தினம் நேரில் சென்று தனது  பாராட்டுக்களை தெரிவித்ததோடு அன்பளிப்புகளையும வழங்கி கௌரவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்த அவர் அமைச்சர் சார்பிலும் அன்பளிப்புகளையும் கையளித்தார். அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் சார்பில் பாராட்டுக்களையும் பரிசுகளையும வழங்கிய மாநகர முதல்வர் அமைச்சர் விரைவில்  மாணவியை நேரில் சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply