யாழ் தபால் பயிற்சிக் கல்லூரியை அமைச்சர் டக்ளஸ் இன்று திறந்து வைத்தார்
யாழ்ப்பாணம் பிரதம தபால் கந்தோரில் நிறுவப்பட்டுள்ள தபால் பயிற்சிக்கல்லூரியை இன்று காலை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். யாழ் பிராந்தியத்தின் தபால் சேவைகளை சிறந்த முறையில் விஸ்தரிக்கும் வகையில் இப்பயிற்சிக் கல்லூரியில் நூல் நிலையம் கணணி அறை பயிற்சி வகுப்பறை என்பன நிறுவப்பட்டுள்ளதுடன் பயிற்சிகளைச் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் பொருட்டு போதனாசிரியர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த திறப்பு விழா வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில்,
கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த பயிற்சிக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அன்றைய அரசில் சூழ்நிலை காரணமாக அது சாத்தியப்படவில்லை. இன்றைய தினம் இக்கல்லூரி ஆரம்பித்து வைக்கப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியளிகக் கூடியதொரு நிகழ்வாகும்.
குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பயிற்சிக் கல்லூரின் மூலம் பிராந்திய மொழிகளிலேயே பயிற்சிகளை நிறைவுசெய்யக் கூடிய சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்ப பட்டுள்ளது எனவும் அமைச்சர்; தெரிவித்துள்ளார். இந்த வைபவத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ் தபால்மா அதிபர் எம்.கே.பி. திசநாயக்க பிரதி தபால்மா அதிபர் அசோகா மம்பிட்டி ஆராச்சி பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் உட்பட தபால் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply