டான்பாஸ் நகரில் நடைபெற்ற போரில் 100 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் ராணுவம் தகவல்

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் அனைத்து நகரங்கள் மீது வான்வெளி மற்றும் தரை வழியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

டான்பாஸ் நகரில் இரு தரப்பிற்கும் இடையே  சண்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதில் ரஷிய ராணுவ வீரர்கள் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,  ஆறு ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனின் வடக்கு ரிவ்னே மாகாணத்தில் தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷியா படையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். இடிப்பாடுகளில் பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ரிவ்னே மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டொனெட்ஸ்க் நகரில் குடியிருப்புப் பகுதி மீது உக்ரைன் ஏவுகணை தாக்கியதாகவும், இதில் பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டதுடன்,  28 பேர் படுகாயமடைந்துள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply