ரஷியாவுடன் அனைத்து வணிகத்தையும் நிறுத்த வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைனுக்கு எதிராக போரை நடத்தி வரும் ரஷியாவுக்கு கடுமையான வலிமிகுந்த பரிசை கண்டிப்பாக வழங்க வேண்டும். ரஷியாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைனியர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள். ரஷிய சந்தையை விட்டு வெளியேறி வணிகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்களின் டாலர்கள் மற்றும் யூரோக்கள் எங்கள் ரத்தத்துக்காக கொடுக்கப்படுவது இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கனடா நாட்டு பாராளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு கனடா அளித்த மனிதாபிமானம் மற்றும் ராணுவ உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘உக்ரைன் வான் எல்லையை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்க கனடா உதவ வேண்டும்’’ என்று தெரிவித்தார். நாடு முழுவதும் பொது மக்கள் பலியாகி வருகிறார்கள். நீங்கள் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு வருகிறீர்கள். இந்த போரில் இதுவரை 97 குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply