உக்ரைனில் மக்கள் தஞ்சம் அடைந்த பகுதிகள் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 22 வது நாளாக தொடர்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த போர் காரணமாக மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் சமூக மையங்களை குறி வைத்து ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கம் மற்றும் நீச்சல் குள வளாகம் மீது ரஷியப் படைகள் குண்டு வீசி தாக்கியதாக , அந்நகர உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அங்கு பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் பலர் குழந்தைகள். ரஷிய தாக்குதலில் அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது. 1,000 பேர் வரை அந்த கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேபோல் கிழக்கு உக்ரைன் நகரமான மெரேஃபாவில் ரஷிய படைகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply