தமிழகம் கோடியக்கரையில் ஆளில்லா இலங்கை படகு கைப்பற்றப்பட்டுள்ளது
தமிழகம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் இலங்கை பைபர் படகு ஒன்று ஆள்கள் யாருமற்ற நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. கோடியாக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியிலேயே இந்த இலங்கையைச் சேர்ந்த பைபர் படகுமீட்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரிகளிற்கு கிடைத்த தகவலின் பெயரில் இந்த படகு மீட்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் இப் படகானது மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த படகா அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா, இப் படகில் யாரும் வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply