புதினுடன் நேரடியாக பேச தயார்: உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேட்டோ அமைப்பை பொறுத்தமட்டில் எங்களை என்ன செய்வது என்று தெரியாத மேற்கத்திய நாடுகள், பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்பும் உக்ரைன், நேட்டோ விரிவாக்கத்தை விரும்பாத ரஷியா என அனைத்து தரப்பினருக்குமான ஒரு சமரசம் இது. ரஷிய அதிபர் புதினுடன் நான் நேரடியாக பேசத்தயார். புதினை நான் சந்திக்காதவரையில், ரஷியா போரை நிறுத்த விரும்புகிறதா என்பதைப் புரிந்துகொள்ள முடியாது.

போர் நிறுத்தத்துக்கு பிறகு ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ள கிரீமியா, கிழக்கு டான்பாஸ் ஆகியவற்றின் நிலை, பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply