அமெரிக்க அரச செயலகமும்; புலிகள் இயக்கமும்; பேணி வந்த தொடர்புகள் குறித்து கே.பி வெளிப்படுத்தியுள்ளார்: அமைச்சர் யாப்பா

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு என்ற பெயரில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்படி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து அமெரிக்க அரசாங்க செயலகத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது என்று அந்த இயக்கத்தின் புதிய தலைவர் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.  
 
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட போது அரசாங்கம் சர்வதேச சட்டங்கள் எதனையும் மீறிச் செயற்படவில்லை. அரசாங்கத்துக்கு அவ்வாறானதொரு அவசியமும் இல்லை. குமரன் பத்மநாதனைக் கைது செய்வதற்கான சர்வதேசத்தின் ஒத்துழப்பு அரசாங்கத்திற்கு முழுமையான அளவில் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.   இதனையும் விட ஏதாவது விபரங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேட்டு கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அமைச்சர் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply