ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 75, 000 பேர் மீளக் குடியமர்த்த திட்டம்
ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 75, 000 அகதிகளை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக யூஎஸ்எயிட் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நான்கு கட்டங்களாக இந்த மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தை மேற்கோள் காட்டி அந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 15, 000 அகதிகளும், கிளிநொச்சியில் 25, 000 அகதிகளும் மீளக் குடியமர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்குமிட வசதிகள், உணவு, விவசாய நடவடிக்கைகளுக்கான உதவிகள் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் அகதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இவர்களின் மீள் குடியேற்றத்துக்கு வசதியாக மின்சார இணைப்பு, வீதி புனரமைப்பு போன்ற விடயங்களில் கணிசமான பகுதி செய்து முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply