கொக்காவிலில் புதிய தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு அடிக்கல் நடப்படவுள்ளது

வடக்கில் தொலைத் தொடர்பு வசதிகள் மற்றும் ஒலி, ஒளிபரப்புச் சேவைகளை மேம்படுத்தும் வகையில் கொக் காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை மீண்டும் நிர்மா ணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன் முதற்கட்ட நடவடிக்கையாக முல்லைத்தீவு மாவ ட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்காவில் பகுதியில் புதிய தொலைத்தொடர்பு கோபுரத்திற்கான அடிக்கல் நடப்படவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இதற்கான அடிக்கல் நடும் விழா நடைபெறவுள்ளது. சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 172 மீற்றர் உயரத் திற்கு இக்கோபுரம் கட்டப்படவுள்ளது. கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் 1990ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் திகதி புலிகள் தொலைத்தொடர்பு கோபுரத்தை தாக்கி இப்பகுதியை கைப்பற்றியிருந்தனர்.வன்னி மனிதாபிமான நடவடிக்கையினூடாக படையினர் 2008ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி மீண்டும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply