செல்வராசா பத்மநாதன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் புலிகளின் வெளிநாட்டு முகவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு முகவர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளதாக சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.பாதுகாப்பு தரப்பினால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும்  பத்மநாதன் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தகவல்கள் வெளியாகியுள்ள சிவபாலன் எனப்படும் நெடியவன் உள்ளிட்ட 20 பேரை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய முகவர்கள் 20 பேர் 12 நாடுகளில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகளுக்கு குறித்த நபர்களே பணத்தை அனுப்பி வைத்துள்ளனர் எனக் குறிப்பிடப்படுகிறது. ஆயுதக் கப்பல்கள், விமானக் கொள்வனவு என பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply