அங்குலானை இளைஞர்களின் சடலங்கள் பத்தாயிரம் பேருக்கு மத்தியில் நல்லடக்கம்

 அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட தனுஷ்க உதயசாந்த (வயது 27) மற்றும் தினேஸ் தரங்க ஆகிய இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்று  மாலை 4.00 மணியளவில் அங்குலானை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது சோகத்தினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தும் முகமாக இந்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் சப்ரகமுவா மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சன் ராமநாயக்கா மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த இரு இளைஞர்களின் சடலங்கள் அவர்களது இல்லங்களிலிருந்த எடுத்து வரப்பட்டு அங்குலானை பொலிஸ் நிலையத்தைக் கடக்கும் தருவாயில் பிரிதொரு சம்பவமொன்று இடம்பெறவிருந்த போதிலும் அது பின்னர் சுமூகமான நிலைமைக்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அங்குலானை பொலிஸ் நிலையத்துக்கு முன்னர் நின்றிருந்த அதேவேளை, பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புக்காகவும் விஷேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தவிர்ந்த இறுதிச் சடங்கு இடம்பெற்ற வேறு எந்தவொரு இடத்திலும் பொலிஸாரைக் காணக்கூடியதாக இருக்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply