மீள்குடியேற்றம் தாமதமடையுமானால் மக்களின் பகைமைத்தன்மை அதிகரிக்கும்: ரணில்
அகதி முகாம்களில் நிலவுகின்ற நிலைமைகள் தொடர்பாக அறிவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த முகாம்களுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும். மக்களை மீளக்குடியமர்த்தும் செயற்பாடுகள் தாமதமடைவதன் மூலம் அம்மக்களிடம் பகைமைத்தன்மை அதிகரிக்கும் நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply