நல்லூர் தேர் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் தாலிக்கொடிகள் உட்பட பெருமளவு நகைகள் கொள்ளை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் பல இலட்சம் ரூபா பெறுதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை மற்றும் பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லூர் கந்தனின் தேர் உற்சவத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது இரண்டு பெண்களின் தாலிக் கொடிகள் மற்றும் ஏழு பெண்களின் தங்கச் சங்கிலிகள், ஒருவரின் கைச் சங்கிலி என்பன காணாமல் போயுள்ளதாக யாழ். மாநகர சபை உற்சவ கால பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பல நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை தவிர மேலும் பல கொள்ளைச் சம்பவங்கள் தேர்த் திருவிழாவின்போது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply