யாழ். விவசாய நிலங்களிலிருந்து இராணுவத்தினர் விலகினர் இனி விவசாயம் செய்யலாம்: அமைச்சர் தேவானந்தா

மீள் குடியேற்றப்பட்டுள்ள பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பூரண சுதந்திரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அம்மக்களுடைய விவசாய நிலங்களில் தங்கியிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதால் அந்த விவசாய நிலங்களில் பயிரட்டு தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், நாவற்குழி, கைத்தடி மற்றும் மரவன்புரம் போன்ற கிராமங்களில் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீளக் குடியமர்த்தும் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.  நாவற்குழி, முருகன் கோயிலுக்கு முன்னால் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த இந்த மக்களை மீளக் குடியமர்த்த தான் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்று தீர்வு கிட்டியுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் மீளக் குடியமர்த்தப்பட்ட இந்த மக்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர்,மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.   இந்த உற்சவத்தின் போது கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டிருந்த 809ஆம் இலக்கத்தையுடைய தன்கிழப்பு  சாவகச்சேரி வீதியும் பொதுமக்கள் போக்குவரததுக்;காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply