ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மா பகுதியில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்களை தனித் தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாகவும், இத்தாலி பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமது டுவிட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார். மேலும் செனகல் அதிபர் மேக்கி சால், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனைச் சந்தித்து பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றில் இந்தியா-ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து ஆக்கப்பூர்வ முறையில் விவாதம் நடத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply