வடக்கு முகாம்களின் இன்றைய நிலை குறித்து அமெரிக்கா கவலை
வடபகுதி இடைத்தங்கல் முகாம்களின் நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. தற்போது நிலவும் மழைக் காலநிலையினால் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொற்று நோய்களினால் பீடிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு 2,80,000 பேர் வரை அகதி முகாம்களில் உள்ளனர் இவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சனத் தொகை மற்றும் அகதிகள் விவகாரத்திற்கான அமெரிக்க துணைச் செயலாளர் எரிக் சிச்வார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இடைத்தங்கல முகாம் நிலவரம் குறித்து திருப்தியடைய முடியாத நிலையே காண்ப்படுகின்றது . அண்மைக் காலமாக ஏற்பட்ட கடும் மழை காரணமாக சுமார் 2000 தற்காலிகக் குடில்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், கால தாமதம் ஏற்பட்டால் பிரதேசத்தில் தொற்று நோய் ஏற்படக் கூடும் எனவும் எரிக் சிச்வார்ட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply