27 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய தந்தைக்கு ரூ.1 கோடி நிதி திரட்டிய அன்பு மகள்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பர்கர் கிங்கில் சமையல்காரராகவும் காசாளராகவும் 27 ஆண்டுகளாக ஒரு நாள் தவறாமல் பணியாற்றியுள்ளார் போர்டு என்ற மனிதர். ‘பர்கர் கிங்’ என்ற நிறுவனத்தின் ஊழியரான கெவின் போர்டு என்பவர், தான் பணிபுரிந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது. கெவின் போர்டின் மகள் செரினா, தனது தந்தைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி, தன் தந்தை 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சென்றார் என்ற விஷயத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
தன்னுடைய தந்தைக்கு தக்க பரிசு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய செயலில் அவர் ஈடுபட்டார். 27 வருடங்களாக தன்னையும், தனது மூத்த சகோதரியையும் நன்றாக பார்த்து கொண்ட தனது தந்தைக்கு நன்றிக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நிதி திரட்டும் செயலில் ஈடுபட்டதாக மகள் செரீனா ‘கோ-பண்ட்-மீ’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். வரது மகள் வெளியிட்ட பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு கெவின் போர்டுக்கு பணத்தை அள்ளி வழங்கினர். ‘கோ-பண்ட்-மீ’ என்ற அமைப்பின் மூலம் செரினா இந்த தொகையை திரட்டினார். இவர்களை தொடர்ந்து, பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் ஸ்பேட் என்பவர் 5000 டாலர் பணம் கொடுத்ததாக தெரிகிறது. கெவின் போர்டின் சேவையைப் பாராட்டி நெட்டிசன்கள் தாராளமாக நன்கொடை அளித்ததில் ரூ.1 கோடி வரை சேர்ந்து விட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மகள் செரினா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.
அவருடைய 27 வருடங்களில் ஒரு நாள் கூட லீவு போடாமல் சென்றதற்கு அவரது நிறுவனம் ஒரு சிறிய பரிசு கொடுத்த நிலையில், நெட்டிசன்கள் அவரது உழைப்பை பாராட்டி ரூ.1 கோடிக்கும் மேல் நிதி திரட்டப்பட்டுள்ள சம்பவம் காண்போரை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply