உக்ரைனின் பாம்பு தீவு மீது ரஷியா போர் விமானம் மூலம் குண்டு வீச்சு

உக்ரைன் மீது ரஷியா 129-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைனின் எல்லையில் உள்ள கருங்கடல் பகுதியில் பாம்பு தீவு உள்ளது.

இந்த பாம்பு தீவை போரில் ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் பாம்பு தீவில் இருந்து ரஷியா படைகளை கடந்த சில நாட்கலுக்கு முன் திரும்பப்பெற்றது. இந்நிலையில், பாம்பு தீவு மீது இன்று ரஷியா போர் விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுகோய் -30 ரக போர் விமானம் மூலம் பாம்பு தீவு மீது ரஷியா ப்போஸ்போர்ன்ஸ் ரக குண்டுகளை வீதி தாக்குதல் நடத்தியது. பாம்பு தீவில் இருந்து படைகளை விலகிக்கொண்டபோதும் அங்கிருந்து அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்பப்பெற முடியாததால் அதை ரஷியா குண்டு வீசி அழித்திருக்கலாம் என உக்ரைன் பாதுகாப்பு படை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply