கடும் எதிர்ப்புக்கு இடையே மியான்மர் வந்தார் சீன வெளியுறவு மந்திரி

சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம் மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். மீகாங் டெல்டா பகுதியில் நீர்மின்சாரத் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.

இந்நிலையில், மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர். இதுதொடர்பாக மியான்மர் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், மியான்மர் நாட்டில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டது நாட்டின் இறையாண்மை மற்றும் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகும் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply