35 கிராமங்களின் மீள்குடியேற்றம்: வவுனியாவில் மீளாய்வுக் கூட்டம்

வவுனியா வடக்கில் 35 கிராமங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று நேற்றும்  வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு வசதியாக மேற்கொள் ளப்படும் உட்கட்டமைப்பு வள மேம்பாடுகள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ்  தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரச திணைக்களங்கள், நிறுவனங்களின் அதி காரிகள் பலர் கலந்துகொண்டு தற்போது மேற்கொள் ளப்படும் பணிகளின் முன்னேற்ற நிலவரம் குறித்து விப ரித்துள்ளனர். இதற்கமைய வீதி அபிவிருத்தி 45% உம் மின்சார விநி யோகம் 40% உம் நிறைவடைந்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். குளங்களைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குழாய் நீர் விநியோகப் பணிகளும் பூர்த்திசெய்யப் பட்டு வருகின்றனவென்றும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை, தமது வாழ் விடங்களுக்கு வந்து அவற் றை மீளமைக்கும் பணிக ளில் சில குடும்பங்கள் ஈடு பட்டுள்ளதாகவும் அரச அதி பர் தெரிவித்தார். மீளக் குடி யமர்வதற்காக முகாம்களில் உள்ளவர்களின் விபரங்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி கிடைக்கப்பெற்றதும், அவர்கள் விடுவிக்கப் படுவார்களென்றும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply